Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, March 11, 2019

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை !!

Currently online
மின்வலு மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சு, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலை காரணமாக நாளாந்த மின்சார உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனால் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சன ஜயவர்தன கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில் ;
ரந்தெனிகல, ரன்டம்பே உள்ளிட்ட நீர்மின் உற்பத்திக்கான நீரேந்து பகுதிகளின் நீர்மட்டம் 39 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நீர் மட்டம் வீழ்ச்சியடைந்த போதிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் அளவிற்கு இன்னமும் நிலைமை மோசமடையவில்லை.

தேவையற்ற மின் குமிழ்கள் ஒளிர்வதனை நிறுத்தி இலங்கை மின்சாரசபைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.