Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 21, 2019

சுற்றிவளைப்பின்போது வசமாக மாட்டிய கும்பல் !!

Currently online
போலி நாணயத்தாள்களை அச்சிட்டுவந்த இடமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு கிரிபத்கொட-திப்பிட்டியகொடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட நால்வரில் போலி நாணயத்தாள்களை அச்சிட காரணமாக இருந்த பிரதான சந்தேகநபரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 1,000 ரூபாய் போலி நாணயத்தாள்கள் 32 உம், 500 ரூபாய் நாணயத்தாள்கள் 7 உம் கைப்பற்றப்பட்டுள்ளது

அத்துடன், குறித்த நாணயத்தாள்களை அச்சிடப் பயன்படுத்திய கணனி உள்ளிட்ட மேலும் பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது

போலி நாணயத்தாள்களை மாற்றுவதற்காக, மூவர் களணி-திப்பிடியகொட பகுதிக்கு வந்திருப்பதாக, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.