Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 13, 2019

கேணியில் தவறி வீழ்ந்த குழந்தை நீரில் மூழ்கி பரிதாப பலி !!

Currently online
மட்டக்களப்பு பழுகாமம் பகுதியில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று அருகில் இருந்த கேணியில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டு வந்த பின்னர் தயார் குறித்த குழந்தையை வீட்டுக்குள் வைத்துவிட்டு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

அவ்வேளையில் குழந்தை தவழ்ந்து சென்று வீட்டிற்கு முன்னாலுள்ள கேணியில் தவறி விழுந்துள்ளது.

உணவினை தாயரித்து வந்து தாய் குழந்தையை தேடியபோது குழந்தையை காணவில்லை. 

வீடு முழுவதும் குழந்தையை தேடிய தாயார் பின்னர் சந்தேகத்தில் அருகில் உள்ள கேணியை சென்று பார்த்தபோது குழந்தை நீரில் மூழ்கி கிடப்பதனை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து குழந்தையை மீட்டெடுத்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும் குழந்தையை நீரில் இருந்து மீட்டெடுக்கும் போதே இறந்துள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.