Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 22, 2019

மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் பேரூந்துடன் மோதி உயிரிழப்பு !!

Currently online
மோட்டார் சைக்கிளில் சென்ற 53 வயதுடைய நபர் ஒருவர் பேரூந்து ஒன்றுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்து நீர்கொழும்பு - மீரிகம பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் தேங்காய் பறிக்கும் தொழிலை செய்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தேங்காய் பறிப்பதற்கு தேவையான நீளமான தடி ஒன்றினை மோட்டார் சைக்களில் எடுத்துச் செல்லும் போது இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மீரிகம திசையில் இருந்து வந்த பேரூந்துடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.