Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 28, 2019

ஐ.பி.எல். ; பெங்களூர் - மும்பை இன்று மோதல் !!

Currently online
ஐ.பி.எல். தொடரில் இன்றைய லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.


தொடக்க ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக வெறும் 70 ரன்களில் சுருண்டு தோற்ற பெங்களூரு அணி சொந்த ஊரில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.

கேப்டன் விராட் கோலி, வில்லியர்ஸ், ஹெட்மயர் ஆகியோர் தான் அந்த அணியின் பேட்டிங் தூண்கள் ஆவர். பவுலிங்கில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் நம்பிக்கை அளிக்கிறார். ஆனால் அவருக்கு மற்ற பவுலர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் தனது முதல் லீக்கில் (டெல்லிக்கு எதிராக 37 ரன் வித்தியாசத்தில் தோல்வி) தோல்வியை தழுவியது. தொடக்க ஆட்டத்தில் தோள்பட்டை காயத்தால் பேட்டிங் செய்ய வராத வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உடல்தகுதியை எட்டிவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் களம் காணுவதில் சிக்கல் இருக்காது. யுவராஜ்சிங், டெல்லி அணிக்கு எதிராக அரைசதம் அடித்து கவனத்தை ஈர்த்தார். மறுபடியும் அதே போல் முத்திரை பதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய அணியில் கேப்டன், துணை கேப்டன் என்ற அந்தஸ்தில் இருக்கும் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஐ.பி.எல். களத்தில் நேருக்கு நேர் எதிர்கொள்வது ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

முதல் வெற்றியை பெற இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.