Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 21, 2019

ஐ.நா பேரவையில் இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை இன்று சமர்ப்பிப்பு !!

Currently online
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பிலான மற்றுமொரு பிரேரணை இன்று(21) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த பிரேரணையை பிரித்தானிய உள்ளிட்ட சில நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன.

இந்தப் பிரேரணைக்கும் இலங்கை இணை அனுசரணையை வழங்கி, குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மேலும் 2 வருடகால அவகாசத்தை கோருவதற்கு தயார் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பிலான அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைணயாளர் நேற்று வெளியிட்டுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இலங்கையில் விசேட நீதிப் பொறிமுறை உருவாக்கப்படாமை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இதன்போது விசனம் தெரிவித்திருந்தார்.

எனினும், ஆணையாளரின் அறிக்கையிலும் சில குறைபாடுகள் உள்ளதாக, இலங்கை அரசாங்கம் சார்பில் பதில் வழங்கிய வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன பேரவையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரின் நேற்றைய அமர்வின்போது மகிழ்ச்சி வௌியிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.