Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 13, 2019

உண்மைக் காதல்..............!!!!! அனோத் வர்மா

Currently online
முகம் சிதைந்த போதிலும் 
முற்றிலும் உருக்குலைந்த போதிலும் 
உயிர் கொண்ட காதல் 
ஒரு போதும் மாறாது பெண்ணே

அங்கம் சிதைந்தால் என்ன
அறிவு நெளிந்தால் என்ன
காமத்தை கட்டி அனைத்து 
காதல் செய்பன் தான் 
உடலையும் உருவத்தையும் 
முதலில் நேசிப்பான்

இதோ 
என் காதல் 
அமிலம் உன் முகத்தை குடித்தாலும் 
விபத்து உன் உடலை ஊனம் செய்தாலும் 
கருப்பை அகற்றி குழந்தை இல்லை என்று 
சொன்னாலும்

எப்போதும் நீ தான் 
என் குழந்தை 
எப்போதும் நீ தான்
என் அம்மா 
எப்போதும் நீ தான் 
என் மனைவி

அழகையும்
பணத்தையும் 
உருவத்தையும் 
காதல் செய்யாதீர்கள் 
அது நிலையில்லாதது

எந்த நிலை வரினும் 
நீயே என் மனைவி 
நீயே என் கணவன் என்று 
காதல் செய்யுங்கள்

வாழ்வு மிகவும் ரசனையாகும்

இதோ இவர்களைப்போல் 
என்றும் சந்தோசமாய்

       நன்றி 
அனோத் வர்மா
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.