Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 14, 2019

பொரித்த மீனுக்குள் ஹெரோயின் ; வசமாக மாட்டிய பெண் !!

Currently online
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதியாக உள்ள கணவருக்கு உணவு கொண்டு சென்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கு கொண்டு சென்ற சாப்பாட்டிற்குள் பொரித்த மீன் நடுப்பகுதிக்குள் 210 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்து கொடுக்க முயன்ற மனைவி சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் அக்கரைப்பற்று ஆலம்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்து மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரை பார்ப்பதற்காக சென்ற அவரது மனைவி நேற்று(13) பகல் 12 மணியளவில் சிறைச்சாலைக்கு சாப்பாட்டுடன் சென்றிருந்தார்

குறித்த சாப்பாட்டை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் பொரித்த மீனின் குடல் பகுதியில் சூட்சமமான முறையில் 210 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப் பொருளை மறைத்து எடுத்துவந்துள்ளதை கண்டுபிடித்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பெண்ணை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் .

கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.