Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 21, 2019

இருளுமிழும் வெண்முத்தம்............!!!!!! ரஜி

Currently online
தலைகோதி 
இலாவகமாய் உள்ளீர்க்க
திட்டம் வகுக்கின்றது
இத்தனிமை
விடுபடல்களும்,
விட்டுச்செல்லல்களும்,
விலகியிருத்தலும்
விநாடிக்குள்ளென
துரத்தித்தொலைக்கவென
முரணிட்டும் 
உன் நித்திய நேசங்கள்
தவணையில் பலியாகுதடி
கண்மணி;
விதி கொடியதடி
அன்றொரு நாளில்,
தலைவன் மேனிகுளித்த
உனதான
மொட்டைமாடி துயர்
என்றோ நீங்கிற்று
வரைபடத்தின்
முனையிலும்
முடிவிலும் ஒன்றாய் உனை
உள்ளீர்த்த
தாண்டிய வருடத்தின்
குளிர்வெப்ப
பௌர்ணமியே;
இக்கணம் 
தனியே நீயும் 
தாபவிமோசனம் தேடு
ஒளிவிரிந்த மணல் பரப்பு
உன் வானின் இரட்டை குழந்தைகள்
சகி;
உடனிருக்கும் - உன் 
நிமிடத்திமிரெல்லாம்
நிகழ்காலமென்பவை
நீங்கியழிந்தபின்
தேய்ந்துபோகும்
நிர்க்கதியாகும்
கத்தியழு!
நிற்க,
பின் வளர்வாய்
நேசத்துளிகளை 
நிரப்பிக்கொள்வாய்
மாதமொன்றானபிற்பாடு
உனை முழுமைப்படுத்துவாய்
வாய்ப்புக்களை 
வரமென தீர்ப்பாய்
மீண்டும் தேயவும்
ஆவாஹனம்
செய்யப்படுவாய்.

எதிர்காலம்
மாறுதலின் 
உறைவிடமாகும்
சகியே,
இரசிக்க துளியளவும்
திராணியற்றது
இவ்வெளிர் இரவு.

நன்றி 
 ரஜி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.