Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, March 25, 2019

நான் ஒரு யாசகன்...........!!!!!!!! சுஜா தவம்

Currently online
சில தொலைவிலேனும்- என் 
தொண்டை நனைக்கும் ஆறோ 
குளமோ இருக்கும் என 
தேடி போகிறேன்.

அங்கே மழை மேகம் காணாத 
குளத்தடி உடலெல்லாம் 
வெளிப்பாய் தெரிகிறது . 
வெட்கம் என் கண்களும் 
சுருங்கி கொண்டது.

எட்டு திசையிலும் உயர வளர்ந்த 
உயிரற்ற மரங்கள் 
அசைவற்று நிற்கிறது.
அதன் விலை பல்லாயிரம் போகும்.
ஓராயிரம் உயிருள்ள மரங்களை 
வெட்டி கட்டப்பட்டதால்.

தவறாது வந்து கொண்டிருக்கும் 
தினசரியில் தினம் தினம் 
ஒவ்வொரு மர கன்றையும் 
புதைக்கும் புகைப்படங்கள்.
அது ஆளும் கட்சி போலிருக்கும்.

புதைப்பதற்கு மாபெரும் விழா எடுத்து 
பாதுகாவலர் படை சூழ 
வான்வெளியோடு வாகன செலவும் 
வைத்து யாருக்கு என்ன பலன்
கருக தானே போகிறது.

மறு பக்கங்களில் சுடு காட்டில் 
எரியும் பிணத்தை வாயால் 
ஊதி அணைக்கும் செய்திகள்.
அது எதிர் கட்சி போலிருக்கும்.

நிலத் தாயின் பிரசவங்கள் 
கூடிக் கொண்டே போகிறது
உறிஞ்சப்படும் பாலால் 
அவள் உடல் வறண்டு போய் கிடப்பது
அதை காட்டி கொடுக்கிறது.

தாகம் வரும் போதெல்லாம் 
இதை சிந்திக்கிறது மூளை
மிகுதி நேரம் நான் பசிக்கு 
திண்டாடி கொண்டிருப்பேன்.

வீதியில் செல்லும் வாகனங்கள் 
கிளப்பி விடும் புழுதி காற்றை 
சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கும்
எதுவுமறியா யாசகன் நான்.

  நன்றி 
சுஜா தவம்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.