Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 15, 2019

பெண்மை............!!!!! பூநகர் சாந்

Currently online
உதரத்தில் என்னை தாங்கி
உதிரத்தை உணவாக்கினாள்
உலகினில் நடக்கவிட்டு
உணர்விலே ஒன்றானாள்

நட்புடனே அழைத்து
நண்பியாய் தொடர்கின்றாள்
நம்பிக்கை கொண்டே
நடக்கின்றாள் ஓர் பயணம்

ஒரு தாயின் வயிற்றினிலும்
ஒற்றுமையாயும் உறவாகி
ஒழுக்கத்தை போதிக்கின்றாள்
ஒரு சகோதரியாய் பயணிக்கின்றாள்

குருவாகி உறவாகி
குங்கும திலகமிட்டு
குறையற்ற வாழ்க்கையை 
குடைபிடித்தே பயணிக்கின்றாள்

பாரினிலே மனதிலே
பார்வையிலே செயலிலே
பா போற்றும் உருவாகி
பாசத்திலே நிலைத்துவிட்டாள்

   நன்றி 
பூநகர் சாந் 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.