Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 20, 2019

காணாமல் போன பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு !!

Currently online
கடந்த 5 நாட்களாக காணாமல் போனதாகக் கூறப்பட்ட, பாடசாலை மாணவன் ஒருவன் நாவலப்பிட்டி- மாப்பாகந்த பிரதேசத்தில் கற்குகையொன்றிலிருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி- மாப்பாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த காவிந்த மதுசங்க என்ற 17 வயதுடைய மாணவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவனைக் காணவில்லை என நாவலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைபாட்டுக்கமைய, பிரதேசவாசிகளுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையிலேயே மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மாணவன் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.