Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 19, 2019

தமிழக அரசியல்வாதியாக களம் இறங்கும் சன்னி லியோன் !!

Currently online
நடிகை சன்னி லியோன் தமிழில் உருவாகும் ஒரு புதிய படத்தில் தமிழக அரசியல்வாதியாக நடிக்கவுள்ளார்.

கனடாவில் பிறந்த சன்னிலியோன் அமெரிக்காவில் ஆபாச நடிகையாக பணிபுரிந்து வந்தார். அதன்பின் அதை விட்டுவிட்டு பாலிவுட்டில் கால் பதித்து சில படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தார். கவர்ச்சி பாடல்களில் நடனம் ஆடினார். தமிழில் வடகறி எனும் படத்தில் நடிகர் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். தற்போது, வீரமாதேவி என்கிற படத்திலும் முக்கிய வேடத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந் நிலையில், வீரமாதேவி படத்தை இயக்கிவரும் வி.சி.வடிவுடையான் அடுத்து ஒரு அரசியல் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘டெல்லி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க அரசியலை மையமாக கொண்டுள்ள இப்படத்தில் தமிழக அரசியல்வாதியாக சன்னி லியோன் நடிக்கவுள்ளார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.