Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 09, 2019

இறந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் செல்லமாட்டேன் !!

Currently online
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க, நான் இறந்தாலும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில் ; நான் ஐக்கிய தேசிய கட்சிக்கு சென்றுவிட்டதாக சிலர் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். நான் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். இறந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் செல்லமாட்டேன்.

இன்று இப்படி நான் தெரிவித்த பின்னரும் நான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இருப்பதாக யாராவது தொடர்புபடுத்திப் பேசினால் என்னிடம் அடிவாங்கத் தயாராக இருங்கள் என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நிகழ்விற்கு வருவதற்கு முன்னர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சந்திரிக்கா, ஜனாதிபதி வருகை தரும்போது வெளியேறிச் சென்றதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.