Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 22, 2019

இரகசிய கமரா மூலம் ஆபாச படம் பிடித்து பணம் சம்பாதிக்கும் கும்பல் !!

Currently online
தென்கொரியாவில் 1,600 பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையதளத்தில் விற்பனை செய்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தென்கொரியாவில் ஆபாச வீடியோக்களை தயாரிப்பது, பகிர்வது ஆகியவை சட்டப்படி குற்றமாகும்.

இந் நிலையில், மர்ம கும்பல் ஒன்று அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் கோட்டலில் அறை எடுத்து தங்கிய பெண்களை ரகசிய கமரா மூலம் ஆபாசமாக படம் பிடித்து, இணையதளத்தில் விற்று, பணம் சம்பாதித்தது அம்பலமாகி உள்ளது. 

இதனால் சுமார் 1,600 பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் ஆபாச வீடியோக்களை பதிவு செய்வதை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியதாகவும், அதன் மூலம் 6,200 டொலர்கள் (சுமார் ரூ.4 லட்சத்து 25 ஆயிரம்) வரை சம்பாதித்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

இவர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டால் ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், சுமார் ரூ.18 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என தெரிகிறது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.