Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 21, 2019

அதிநவீன வகை துப்பாக்கிகளுக்குத் தடை ; நியூஸ்லாந்து பிரதமர் அதிரடி !!

Currently online
நியூஸ்லாந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கு துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கான உரிமம் வழங்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள நியூஸ்லாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன், இராணுவ ரகத்தைச் சேர்ந்த செமி ஆட்டோமெடிக் ரக துப்பாக்கிகளுக்கும், தொடர் தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கும் தடை விதிப்பதாகக் கூறியுள்ளார். 

அத்துடன், துப்பாக்கிகளின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கும் மேகசின்கள், பம்ப் ஸ்டாக் போன்றவற்றுக்கும் தடை விதிப்பதாக ஜெசிண்டா கூறியுள்ளார்.

துப்பாக்கி விற்பனையாளர்கள் மற்றும் ஏற்கெனவே துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அரசிடம் திரும்ப அளித்தால் சலுகை விலையில் ஏற்றுக் கொள்வதாக நியூசிலாந்து பிரதமர் அறிவித்துள்ளார். 

மீறி துப்பாக்கியை வைத்திருப்பவர்களுக்கு 4 ஆயிரம் நியூசிலாந்து டொலர் அபராதமும் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.