Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 26, 2019

மேக்கப் இல்லாமல் முகத்தை அழகாக வைத்திருப்பது எப்படி?

Currently online
முக ஒப்பனை செய்வது எப்படி என்பதை விளக்க குறிப்புகள் நிறைய உள்ளன, ஆனால் அதே நேரத்தில் இயற்கையாகவும் தெரிய வேண்டும். ஆனால், உங்கள் முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் நீங்கள் அழகாக இருக்க முடியும்.

உங்கள் முகத்தில் எவ்வளவு உயர்தரமான ஒப்பனைப் பொருட்களை நீங்கள் பயன்படுத்தினாலும், வலுவான பொடிகள், சிவப்பாக்கிகள், ஷேடோஸ் மற்றும் மஸ்காரா ஆகியவற்றிலிருந்து அவ்வப்போது இடைவெளி எடுக்க வேண்டியது அவசியம்.

அழகு 
மாடலிங் செய்பவர்கள் செயற்கை eyelashes, சரியான ஸ்கின் மற்றும் சரியான புருவத் திருத்திகளை மேக்கப் பெட்டியில் வைத்திருந்தாலும் இயற்கையான அழகைப் பெற முடியாது. நீங்கள் கண்ணாடி முன் தினமும் செலவழித்தாலும் கூட சில பொருட்களில், அவை தோலின் தோற்றத்தையும் வண்ணத்தையும் மேம்படுத்தும் என எழுதியிருந்தாலும் அவை வாக்குறுதியை நிறைவேற்றுவதில்லை.

மேக்கப் 
மேக்கப், உங்கள் முகத்தின் அழகை முன்னிலைப்படுத்த உதவுகிறது. ஆனால் அவ்வப்போது அதைத் தவிர்த்து உங்கள் இயற்கை உருவத்திலேயே பொது வெளியில் செல்ல முயற்சி செய்யுங்கள். ஒப்பனைத் தயாரிப்புகளின் பயன்பாடு இல்லாமலேயே உங்கள் முகத்தை புத்துணர்ச்சியோடும், அழகாகவும் வைத்திருப்பது எப்படி என நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த பயனுள்ள உதவிக் குறிப்புகளைத் தொடர்ந்து படிக்கவும்.

நீரேற்றம் (ஹைடிரேஷன்) மற்றும் தூக்கம் 
மனிதர்களின் உடலில் நீரிழப்பு மற்றும் சோர்வு முதன்முதலில் முகத்தில் தான் தெரிகிறது. எனவே, நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 6 முதல் 8 மணிநேரங்களுக்கு நீங்கள் தூங்க வேண்டும். நீங்கள் நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்த பின், உங்கள் முகம் புத்துணர்ச்சியாய் இருக்கும். மேலும், திரவ நிறைவும் உடலின் நல்ல தோற்றத்திற்கு மிக அவசியம். எனவே, நிறையத் தண்ணீர், இனிப்பூட்டப்படாத தேநீர், மற்றும் இயற்கை பழச்சாறுகளை அருந்துங்கள். உங்கள் முகத்தின் மங்கலான தன்மை நீங்கி சீக்கிரம் சரியாகிவிடும், ஆகையால் உங்களுக்கு ஒப்பனை பொருட்களின் உதவி அடிக்கடி தேவைப்படாது.

ஊட்டச்சத்துக்கள் 
உங்கள் பிரகாசமான மற்றும் இளமையான தோற்றத்திற்கு நீங்கள் சாப்பிடும் உணவு மிகவும் முக்கியமானது. முகப் பளபளப்புக்கு நிறைய காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடுங்கள்.

முகச் சுத்திகரிப்பு 
முகச் சுத்திகரிப்பு உங்களை அழகாக்க அவசியம். நீங்கள் முக ஒப்பனை செய்யாவிட்டாலும் கூட, படுக்கைக்குச் செல்லும் முன் உங்கள் முகத்தைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். ஏன் தெரியுமா? உங்கள் முகத்துடன் தொடர்பில் உள்ள காற்று, உங்களின் தோலின் மேற்பரப்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பல துகள்களை சுமந்து வருகிறது மற்றும் அவை தோலின் மேற்பரப்பில் அமர உதவுகிறது. மேலும், நாம் எப்பொழுதுமே சுத்தமாக இருப்பதில்லை, அந்த சமயங்களில் நாம் சுத்தமற்ற கைகளால் முகத்தைத் தொடுகிறோம். இறுதியில், தோல் பாதுகாப்பிற்கு உதவியாக செயல்படும் இயற்கை எண்ணெய்கள் உள்ளன, ஆனால் அவற்றின் அளவிற்கு அதிகமான உபயோகங்களும் (நீங்கள் எண்ணெய் தோல் குறிப்பாக இருந்தால்) முகத்தோலின் நுண் துளைகளை அடைத்து பிரச்சினைகளை உருவாக்க முடியும்.

சுத்தமான புருவம் 
கடந்த சில பருவங்களாக இயற்கையான மற்றும் அடர்த்தியான புருவங்களே நவநாகரீகமாக உள்ளன, எனவே அவற்றை அழகுபடுத்திக் காண்பிக்க உங்களுக்கு அதிக முயற்சி தேவைப்படாது. எனினும், tweezer -களை நீங்கள் முற்றிலும் மறந்துவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. அவ்வப்போது, ​​உங்கள் புருவங்களை வடிவமைக்கவும், அவர்களை நேர்த்தியாக்கவும், அவற்றை பிரஷ் கொண்டு அழகுபடுத்தவும், கத்தரிக்கோலால் நீண்ட முடிகளை வெட்டி சுருக்கவும். 

முகக் கிரீம்கள் 
மென்மையான தோலுக்கு பேஸ் கிரீம்கள் அவசியம். அவை உங்கள் முகத்தை ஹைட்ரேட் செய்து எதிர்மறையான தாக்கங்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. நாள்முடிவதற்குள் உங்கள் முகத்தின் சில பாதுகாப்புக் காரணிகளுக்காக ஈரப்பத மூட்டியை (moisturizer) அணியவும்.

முடி 
ஒரு நல்ல முக தோற்றத்திற்கு, சிகை அலங்காரமும் ஒரு முக்கிய காரணி. சரியான சிகை அலங்காரம் ,உங்கள் தோற்றத்திற்கு அதிசயங்கள் செய்யலாம். மேலும், உங்கள் முடி எப்போதும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும் என்பதை உறுதிப் படுத்தவும். நீங்கள் முழு ஒப்பனையில் இருந்தாலும் உங்கள் முடி, எண்ணெய்ப் பசையுடன் மங்கலாக அல்லது உடைந்து போயிருந்தால் நீங்கள் கவர்ச்சிகரமாக இருக்க மாட்டீர்கள் என்பது நிச்சயம். எனவே நல்ல சிகை அலங்காரம் முதல் இடத்தைப் பிடிக்கிறது.

புன்னகை  
எவ்வளவு மேக்அப் செய்தாலும், ​​ஒரு புன்னகை சேர்க்கும் அழகை எந்த அலங்காரத்தாலும் உங்களுக்கு கொடுக்க முடியாது. உங்களிடம் பிரகாசமான தோற்றம் மற்றும் அழகான புன்னகை இருந்தால் நீங்கள் மக்களைக் கவர அவர்களுக்கு உங்கள் ஒப்பனைத் திறனைக் காட்டத்தேவையில்லை. புன்னகையால், உங்கள் முகம் பிரகாசிக்கும்.

உங்கள் ஒப்பனையை விட்டுத் தர என்ன காரணம் இருந்தாலும், நீங்கள் எந்த நேரத்திலும் சிறப்பாகத் தோன்றுதல் மற்றும் தன்னம்பிக்கை, இயற்கை வாழ்க்கையை நம்புங்கள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.