Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 20, 2019

எப்படி சொல்வேன்........??? தோழி கவிதாயினி

Currently online
என் அன்பிற்குரிய எல்லோரும் 
என்னை சிரிக்க சொல்லி கேட்கிறார்கள்...
எப்படி சிரிப்பேன்???
நான் தான் இன்னும் அழுதே 
ஓயவில்லையே...

தோழமையோடு வந்த தோழிகளும்
வலி பற்றி அழகாய் வரையறுக்கிறாய்...
உன்னால் மட்டும் எப்படி 
முடிகிறதென்று வியக்கிறார்கள்...
எப்படி உரைப்பேன்???
வலியைத் தாங்கித் தாங்கியே
ரணமாய் போன மனது எனதென்று...

பாசமலர்கள் பலரும் 
இழப்பைப் பற்றி எப்போதும் 
பதிவிடாதே என்கிறார்கள்...
எப்படிச் சொல்வேன்???
இனி இழப்பதற்கு புதிதாய் என் 
வாழ்வில் எதுவுமே இல்லை என்று...

கவிப்பிரியர்கள் அனேகர்
தனிமை விரும்பியென்று 
அழைக்கிறார்கள்...
எப்படி விளக்குவேன்???
என்னை நேசிப்பவர்களின் 
நன்மை கருதியே
தனிமையில் தஞ்சம் 
புகுந்து கொண்டேன் என்பதை...

கூர்ந்து நோக்கிய சிலர்
பேறு பற்றி அதிகம் எழுதுகிறாயே...
என்ன காரணம் என்று ஆராய்கிறார்கள்
எப்படி கூறுவேன்???
பட்டுப் போன வயிற்றில் 
பால் வார்க்க வழியில்லை என்று...

யாரென்று அறிந்திராத 
நலன் விரும்பிகள் கூட
சாவைப் பற்றி பேசாதேயென்று 
சண்டையிடுகிறார்...
அவர்களுக்கு எப்படி எடுத்துரைப்பேன்??
இப்போது நடமாடுவதே 
ஓர் நடைப்பிணம் தான் என்று....

தொடுவானில் சுடுபட்ட மேகமாய் நான் 
மேற்கில் சூரியன் உதித்தாலும் - என் 
வாழ்வில் விடியல் என்பதே கிடையாது...
என் மரணமும் தடைபடப் போவதேயில்லை!!

           நன்றி 
தோழி கவிதாயினி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.