Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 01, 2019

அபிநந்தனை வரவேற்க காத்திருக்கும் பொதுமக்கள் !!

Currently online
சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய போர் விமானி அபிநந்தனை இன்று விடுவிக்கும் பாகிஸ்தான், வாகா எல்லையில் வைத்து அவரை ஒப்படைக்கவுள்ளது.

இதை முன்னிட்டு, எல்லையை ஒட்டி அமைந்துள்ள அட்டாரி பகுதியில் தேசியக் கொடிகளுடன் பொதுமக்களும் திரளத் தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் வலியுறுத்தல் மற்றும் சர்வதேச அழுத்தம் காரணமாக, அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் நேற்று தெரிவித்தார். 

அமைதிக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்திய போர் விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுவார் என அவர் அறிவித்தார்.

அதன்படி இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைந்துள்ள அட்டாரி-வாகா எல்லையில் வைத்து அபிநந்தனை பாகிஸ்தான் தரப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கிறது. 

வாகா வழியாக இந்தியாவிற்குள் வரும் அபிநந்தனை இந்திய விமானப்படை குழு அட்டாரியில் வரவேற்கிறது. அபிநந்தனின் பெற்றோரும் அங்கு அவரை வரவேற்கின்றனர். நாடுபோற்றும் விமானப்படை வீரர் அபிநந்தனை வரவேற்க அட்டாரி பகுதியில் தேசியக் கொடிகளுடன் பொதுமக்களும் திரளத் தொடங்கியுள்ளனர். 

பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும் அபிநந்தனை வரவேற்க திட்டமிட்டுள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.