
இந்த புதிய ETC அட்டைக்காக எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் பதிவு செய்ய முடியும்.
புதிய கொடுப்பனவு மூலம் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு கட்டணத்தை செலுத்தும் பணிகளை செயல்திறன் மிக்கதாக மேற்கொள்ள முடியும் இந்த வசதி தற்பொழுது கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு மாத்திரம் உண்டு.
ஜாஎல சீதுவ கட்டுநாயக்க இடமாறும் மத்திய நிலையத்தில் அட்டையை பதிவு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 1969 என்ற உடனடி தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புக் கொண்டு அறிந்துக்கொள்ள முடியும்.
கொழும்பு சுற்றுவட்ட வீதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. வெளியேறும் பகுதியில் பணம் செலுத்தி பயணிக்கும் பொழுது மணித்தியாலத்துக்கு 250 வாகனங்கள் வரையறுக்கப்படுகின்றன. இந்த அட்டை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மணித்தியாலத்துக்கு 1250 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் வெளியேறக்கூடியதாக இருக்கும்.
பண்டிகை காலத்திலும் அலுவலக நேரத்திலும் ஏற்படும் நெருக்கடி நிலையின்போது நிலவும் கியூ வரிசைக்கு இதன் மூலம் தீர்வு ஏற்படும் என்று பெருந் தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.