Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 14, 2019

வெப்பமான வானிலை ; மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை !!

Currently online
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, உள்ளிட்ட வட மாகாணத்தில் இன்று வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அநுராதபுரம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 34 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், கண்டி மற்றும் மன்னாரில் 33 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் இன்று பதிவாகியுள்ளன.

கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் 32 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் மட்டக்களப்பு மற்றும் காலி மாவட்டங்களில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளன.

இதேவேளை அதிகளவான வெப்பம் பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என அனைவருக்கும் உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்பட கூடும் என வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே அதிகளவில் நீர் அருந்துமாறும் சிறுவர்கள், முதியோர் மற்றும் நோயாளர்கள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர மருத்துவ உதவிகளுக்காக 1990 என்ற அவசர அம்பியூலன்ஸ் இலக்கத்துடன் தொடர்புகொண்டு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.