Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 06, 2019

காபன் பரிசோதனை அறிக்கை சட்ட பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது !!

Currently online
மனித எச்சங்களின் உடல்கூற்று காபன் பரிசோதனை அறிக்கையானது சட்ட பூர்வமாக இன்று கிடைக்கப்பெற்றுள்ளது

இவ் விடயத்தை அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் காபன் பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரி தலைமையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

14 நாட்களில் குறித்த பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போது சட்ட ரீதியாக கடந்த நாட்களில் கிடைக்க பெறா நிலையில் இன்று குறித்த அறிக்கையானது சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த அறிக்கை தொடர்பான எந்த விபரங்களையும் தன்னால் வழங்க முடியாது எனவும் அவ் அறிக்கை தொடர்பாக ஆர்வம் உள்ளவர்கள் குறித்த அறிக்கையினை மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் ஊடாக பெற்று கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

இதுவரை குறித்த மனித புதைகுழியில் இருந்து 335 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 318 மனித எச்சங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.