Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 26, 2019

இன்று முதல் இரண்டு நாட்கள் போராட்டத்தில் குதித்த தாதியர்கள் !!

Currently online
நாடளாவிய ரீதியில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு அரசாங்க தாதியர்கள் சுகயீன விடுமுறை அடையாள வேலை நிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய தாதியர் சேவை ஒன்றியத்தின் தலைவர் முருத்தெட்டுவ ஆனந்த தேரர், இன்று காலை 7.00 மணி முதல் இரண்டு நாட்களுக்கு இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தார்.

மேலும் அவர், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார்.

எனினும், சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மஹரகம புற்று நோய் வைத்தியசாலை, டி சொய்சா வைத்தியசாலையின் பெண்கள் மற்றும் விசேட பிரிவு, அதிதீவிர சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றில் இந்த அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.