Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 16, 2019

களவாடப்படும் இரவுகள்..........!!!!!!!! கூடலூர் சிந்துஷன்

Currently online
விழிகள் விழித்து கிடக்கும்
இரக்கமற்ற இரவுகளின் நீட்சி
சிதையூட்டப்பட்ட பிணத்தின் 
கடைநிலை போராய் என்னுள்!

வழிமறந்து நீண்ட பயணத்தின் பின்
களைப்புற்று வருந்தும் யாக்கை
புத்தனை போல் அமைதி வேண்டி
போதிமரம் தேடி தவிக்கிறது!

மனம் எங்கும் ஆசை நிறைந்து
மதம் பிடித்த யானை போல
கட்டுக்கடங்காத மோகத்தில் மூழ்கி 
நிலையின்றி அலைகிறது!

பனி பொழியும் நிலவும்
சில்லென்ற குளிர் காற்றும்
துகில் உரித்த மலர்களும்
இரவோடு இசை மீட்டுகிறது!

கழனியோர கால்வாய் நண்டுகள்
காரிருளில் காதல் கொள்ள
வானைமுத்தமிட்ட நிலவின் தடங்கலாய்
விண்மீன்கள் வான் நிரப்ப
ஏனோ என் இரவுகள் மட்டும் 
தினம் வலிகளால் திருடப்படுகின்றதே!

            நன்றி 
கூடலூர் சிந்துஷன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.