Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 20, 2019

ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பான விவாதம் இன்று !!

Currently online
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரின் இன்றைய அமர்வில் இலங்கை தொடர்பான விவாதம் பல்வேறு நாடுகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட் இலங்கை தொடர்பான அறிக்கையை இன்று உத்தியோகப்பூர்வமாக வெளியிடவிருக்கின்றார். பின்னர் அது மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இதன்போது உரையாற்றவுள்ள கனடா பிரிட்டன் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் அழுத்தங்களைப் பிரயோகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இன்றைய இலங்கை குறித்த விவாதத்துக்கு தயாராகி வருகின்றனர்.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதன்போது உரையாற்றவுள்ளனர். 

அதாவது கடந்த 10 வருடகாலத்தில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை போதுமான முன்னேற்றத்தை வெளிக்காட்டவில்லை என்று இதன்போது சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவிக்கவுள்ளனர்.

அத்துடன் சர்வதேச நீதிபதிகளின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தவுள்ளனர். இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டுமென்ற கோரிக்கை இன்றைய தினம் வலுவான முறையில் சர்வதேச நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்படவுள்ளது.

இலங்கையின் சார்பிலும் அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். 

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் இந்த இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளனர். 

விசேடமான இன்றைய விவாதத்தில் அரசாங்கம் சார்பில் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.