Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 26, 2019

ஒரு மாதம் வரை மின்வெட்டு தொடரும் ; மின்சக்தி அமைச்சு !!

Currently online
மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு, நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு ஒரு மாதம் வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

மாற்று வழிகள் மூலம் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இம்மாத இறுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் காலத்தில் தனியார் துறையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ள அட்டவணைக்கு அமைவாக பகல் வேளையில் 3 மணித்தியாலங்களும் இரவில் ஒரு மணித்தியாலமுமாக நாளாந்தம் 4 மணித்தியாலங்களுக்கு மின்சார விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.