Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 16, 2019

இலங்கைப் பெண்கள் இருவர் இந்தியாவில் கைது !!

Currently online
இலங்கைப் பெண்கள் இருவர் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு இலங்கைப் பெண்களும் சிங்கப்பூரில் இருந்து சட்டவிரோதமாக ஒரு தொகை தங்கத்தை கடத்தி வந்த வேளை பூனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 900 கிராமுக்கும் அதிக நிறையுடைய தங்க பிஸ்கட்கள், தங்க மாலைகள் மற்றும் வளையல்கள் ஆகியன அந்நாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி சமார் 30 இலட்சம் இந்திய ரூபாய்க்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் இந்திய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.