Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 14, 2019

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பூசணிக்காய் !!

Currently online
பொதுவாக காய்கறிகள் பல்வேறு மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. 

அதில் பூசணிக்காயில் ஏராளமான அளவுக்கு நார்ச்சத்து அதிகம் இருப்பதனால் அனைவருக்கு உகந்த காய்கறியாக கருதப்படுகின்றது.

பூசணிக்காயில் உள்ள புரோட்டீன் பெண்களின் பிறப்புறுப்பு பிரச்சினையை தீர்க்கிறது. மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத் தன்மையைப் போக்கி வீரியத்தைக் கொடுக்கின்றது.

புற்றுநோயையும் மிக வேகமாகக் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் இந்த பூசணிக்காய் விதை, சதை மற்றும் ஜூஸ்க்கு உண்டு. அதுமட்டுமின்றி பூசணிக்காயின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்பாட்டில் முக்கிய இடம் பெறுகின்றது.

தற்போது பூசணிக்காயின் சதையில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் டயட்டில் வாரத்துக்கு இரண்டு முறையாவது பூசணிக்காயை டயட்டில் கூழாகவோ, பொரியலாகவோ சூப், கூட்டு என ஏதாவது ஒருவகையில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வயிற்றுப் புண் மட்டும் அல்லாது உடலின் வெளிப்புறத்தில் உள்ள காயங்களும் புண்களையும் கூட ஆற்றும் பணியை பூசணிக்காய் செய்கிறது.

பூசணிக்காயை அடிக்கடி நம்முடைய உடலில் சேர்த்துக் கொள்வதால் நம்முடைய உடலுக்குத் தேவையான அளவு நார்ச்சத்தினை நம்மால் பெற முடியும். அது நம்முடைய நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.

உடற்பயிற்சி செய்து முடித்த பின்பு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும்.

வெள்ளை பூசணி அல்லது மஞ்சள் பூசணி. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அது மிகவும் நல்லது. அதிலுள்ள வைட்டமின்கள் கண் பார்வையைத் தெளிவாக்குகிறது.

பொதுவாக காய்ச்சல் வந்துவிட்டால் வாய்ப்புண்ணும் வரும் சமயங்களில் பூசணிக்காயின் சதைகளை எடுத்து கூழ் போல செய்து, சாப்பிடக் கொடுத்தால், காய்ச்சல் மற்றும் சளித் தொல்லை, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும்.

வெள்ளைப் பூசணிக்காயின் சாறெடுத்து காலையில் வெறும் வயிற்றில் தினமும் 30 முதல் 50 மில்லி அளவுக்கு குடித்து வந்தாலே போதும். இதயம் பலப்படும். இரத்தம் சுத்தமடையும்.

அளவுக்கு அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படும்போது வெண்பூசணி சாறு தினமும் குடித்து வந்தால் இந்த பிரச்சினை அடியோடு நீங்கிவிடும்.

பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் நெஞ்சில் தேங்கியிருக்கிற மார்புச்சளி குணமடையும். இருமல், ஜலதோஷம், நெஞ்சு சளி, வாந்தி, தலைசுற்றல் ஆகிய பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

பொதுவாக இரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்கும். மேலும் குடற்புழுக்களை வெளியேற்ற பூசணிக்காய் உதவும். அதன் இலைகள் கூட இதற்குப் பயன்படும்.

cervical cancer என்று சொல்லப்படுகின்ற பெண்ணுறுப்பில், கருக்குழாயில் உண்டாகிற புற்றுநோயை இந்த வெண் பூசணிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யால் குணப்படுத்த முடியும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய் சாறினை சுமார் 120 மில்லி அளவும், ஒரு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் முழுமையாக குணமடையும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.