Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 28, 2019

பீட்ரூட் போண்டா செய்வது எப்படி ?

Currently online

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 4
மிளகாய் - 3
துவரம் பருப்பு - அரை கப்
இஞ்சி துருவல் - சிறிதளவு
சோம்பு - அரை டீஸ்பூன்
அரிசி மா - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - கால் கப்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை 

பீட்ரூட், மிளகாயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

துவரம் பருப்பை சிறிது நேரம் ஊறவைக்கவும்.

பின்னர் அதனுடன் இஞ்சி, மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அதேபோல் பீட்ரூட்டையும் அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் இந்த கலவையுடன் தேங்காய் துருவல், அரிசி மா, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து போண்டா பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கைப்பிடி அளவு உருட்டி கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்  சூப்பரான பீட்ரூட் போண்டா ரெடி. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.