Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 09, 2019

நித்திரை விட்டு எழுந்து தந்தையை தேடிய மகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி !!

Currently online
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று மாலை காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நெற்றி மற்றும் கை என்பவற்றில் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வவுனியா, உக்கிளாங்குளம், 4 ஆம் ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த செ.சிவராஜா (64) என்பவராவார்.

சம்பவத்தின்போது  மகள் உணவருந்தி விட்டு உறங்கியுள்ளார். தந்தையாரும் உணவருந்தி விட்டு வீட்டில் நின்றுள்ளார். நித்திரை விட்டு எழுந்த மகள் தந்தையை தேடிய போது வீட்டின் முன் வாயில் பகுதியில் உள்ள தண்ணீர் பம்பி அருகில் தந்தையார் விழுந்து கிடந்ததை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் மற்றும் உறவினர்களின் உதவியுடன் தந்தையை எழுப்ப முயன்றபோது அவரது நெற்றி மற்றும் கை என்பவற்றில் காயங்கள் காணப்பட்டமையும், மரணித்து இருந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பண்டாரிக்குளம் பொலிசார் குறித்த குடும்பஸ்தரின் சடலத்தை பார்வையிட்டதுடன், சடலத்தில் காயங்கள் காணப்பட்டமையால் உடனடியாக வவுனியா தடவியல் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தடவியல் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.