Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 19, 2019

கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு !!

Currently online
கிழக்கு மாகாணத்தில் இன்றையதினம் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாதென வலியுறுத்தியே ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் ‘நீதிக்கான மக்கள் எழுச்சி’ எனும் தொனிப்பொருளில்  இந்த பூரண ஹர்த்தால் இன்று (19) கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆதரவு வழங்குதாக அறிவித்திருந்தன.

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை மீட்டு தரக்கோரி தொடர்ச்சியான போராட்டங்களில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை

இந் நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றமையால், தங்களது கோரிக்கையை அங்கு கொண்டு செல்லும் நோக்குடன் இந்த பூரண ஹர்த்தால் கிழக்கில் இன்று கடைப்பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.