Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 14, 2019

பொள்ளாச்சி பெண்ணாய் நான்....!! தம்பாட்டியூர் நிவிதன்

Currently online
நம்பித்தானே நாங்கள் 
நாடிவந்தோம் கல்விக்காய்
வெம்ப வைத்துவிட்டாய்
பொறுப்பின்றி பொள்ளாச்சியே...!!

காதலென்னும் உணர்வுகொண்டு
காமப்பேய்கள் எம்மை
அறியாத வார்த்தைகளையும்
எடுப்பான அழகினையும்
வசதியான வாழ்க்கையினையும்
காட்டி தேனாக்கி நினைப்பை
பின் பாழாக்கி வைத்தார்கள்
எம் வாழ்வை

அன்பானவன் என்றுதானே 
அந்தரங்கமெல்லாம் காட்டினேன்
நீயோ அதற்காய்
தான் என்னோடு
அலைந்தாய் என்று
அறிந்தேன் பின் நீதந்த
மிரட்டல்களால்

சாதிக்க கனவோடு வந்த
என்னை பாதிக்கனவோடு
பதற வைத்த பாவிநீயடா!
என்னைப்போல் பலரென்று
அறிந்தேன் இன்றடா!
இனியும் உன்போல்
யாருமிங்கே தோன்ற கூடாதடா!

உழைக்க வழிதெரியாத
ஊதாரி பெத்தபிள்ளை நீயடா!
உனக்கெல்லாம் இல்லை
கொஞ்சமும் உணர்ச்சியடா!
தூக்கை தாண்டியும் 
ஒருதீர்ப்பை தரனும் உனக்கடா!
சட்டங்கள் எல்லாம்
சாணக்யமாகனும் உன்போன்றோருக்கினியடா!

பொறுப்பாய் நீ
இருப்பாய் என்று
நினைத்தோம் 
பொள்ளாச்சித்தாயே!
பொறுப்பிழந்து போனாய்
பொறுக்குதில்லை நெஞ்சு!

           நன்றி 
தம்பாட்டியூர் நிவிதன்

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.