Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 20, 2019

நிரவ் மோடி லண்டனில் கைது !!

Currently online
வங்கிக் கடன் மோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான வைர வியாபாரி நீரவ் மோடியை லண்டன் பொலிஸார் இன்று கைது செய்தனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர் நீரவ் மோடியும், அவரது உறவினரான முகுல் சோக்ஷியும் பிரிட்டனில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அவர்களை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் அரசின் உள்துறை அமைச்சகத்திடம் அமலாக்கத் துறை வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந் நிலையில், நீரவ் மோடியை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் நேற்று முன்தினம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து அவரை லண்டன் பொலிஸார் இன்று கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். நீதிமன்ற உத்தரவின் பெயரில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

நீரவ் மோடி தனது முக அடையாளங்களை மாற்றிக் கொண்டு லண்டன் மாநகர வீதிகளில் சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தது தொடர்பான செய்தி ஊடகங்களில் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.