Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, March 25, 2019

நயன்தாரா பற்றிய சர்ச்சைக் கருத்திற்கு விளக்கம் கூறிய ராதாரவி !!

Currently online
சமீபத்தில் நயன்தாரா நடித்த கொலையுதிர் காலம் படம் தொடர்பான விழாவில் ராதாரவி நயன்தாராவை கீழ்த்தரமாக விமர்சித்தார். 

நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், தெலுங்கு படத்தில் சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் சீதையாக நடிக்க கே.ஆர் விஜயாவை தான் அனுகுவார்கள் ஆனால் இன்று எப்படி பட்டவர்களும் சீதையாக நடிக்கிறார்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தை சொன்னார்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சினிமாத்துறையை சேர்ந்த பலரும் ராதாரவிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் சங்கம் சார்பாக விஷாலும் ராதாரவியை கண்டித்துள்ளார். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில், இந்த விவகாரம் பூதாகரம் ஆகி கடும் எதிர்ப்பு கிளம்பியதால், நயன்தாரா பற்றி பேசியதற்கு ராதாரவி மன்னிப்பு கேட்டுள்ளார். 

“நடிகை நயன்தாரா தொடர்பாக நான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. என்னால் திமுகவுக்கு பாதிப்பு என்றால் கட்சியிலிருந்து நானே விலகிக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.