Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 12, 2019

இரத்தினக்கற்கள் திருட்டு ; பாதாள குழு உறுப்பினர் உட்பட ஐவர் கைது !!

Currently online
ஐம்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 இரத்தினக்கற்களை கொள்ளையிட்ட ஐவர் இன்று (12) நீர்கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினக்கற்களை கொள்வனவு செய்யும் வகையில் வந்து, அவற்றை கொள்ளையிட்ட மொங்​கோலிய பெண்ணொருவர் உட்பட, பாதாள குழு உறுப்பினர் அடங்களாக ஐந்து பேரை களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், முன்னாள் இராணுவ வீரர் என தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாட்டுப் பெண்ணிடம் கூடுதல் விலைக்கு விற்கலாம் எனக் கூறி, இரத்தினபுரி பகுதியிலுள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரை, ஹிம்புட்டான பகுதியைச் சேர்ந்த நபர், களுத்துறை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து, இரத்தினக்கற்களை கொள்ளையிட்டுள்ளாரென, தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வர்த்தகர் வழங்கிய தகவலுக்கமையவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து கொள்ளையிட்ட இரத்தினக்கற்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.