Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 08, 2019

உயிர் சுமக்கும் தெய்வங்கள்......!!! கூடலூர் சிந்துஷன்

Currently online
அம்மா மனைவி மகள் என
அவதாரங்கள் பல எடுத்து 
அன்பென்ற உணர்விற்கு
அடைக்கலம் ஆனாய் நீ!

கருவறையில் உயிர் சுமக்கும்
புவியறை கடவுளராய்
தினம் பல அத்தியாயங்கள்
புதிதாக பிறக்கும் உன்னால்!

பொறுமையின் சிகரமாகி
தியாகத்தின் போரொளியாகி
பாசத்தில் பார் வியக்க
துன்பங்களை இன்பமாக்கும்
மாயவித்தைகள் உன்தனிலே!

ஈன்றெடுத்த சேய்களுக்கு
உதிரத்தை உயிராக்கி 
வயோதிபத்தில் பெற்றோருக்கும்
பணிவிடையில் தாயாகும்
பெண்ணே பெரும் பேறன்றோ!

அமுது படைப்பதில் தொடங்கி 
அண்டங்கள் ஆள்வது வரையில்
பெருமைகளை பிறருக்காக ஈய்ந்து
சிறுமையில் பெருமை கொள்ளும் 
பெண்ணே நீ வாழியவே!!!

            நன்றி 
கூடலூர் சிந்துஷன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.