Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 12, 2019

வீரத்தின் கவி சமைப்போம்.......!!!! கவிப்புயல் சரண்

Currently online
தீமைக்கு எதிர் நின்று 
திறமோடு களம் காணத்
திமிரோடு அணி திரண்டு
திடமோடு அழைக்கின்றோம்

வன்னி மண் ஒரு நாளும்
வசந்தம் தொலைக்காது 
வந்த பகை வாசலிலே
வர விட்டு இருக்காது

சொல்லுக்கு முன் செயலே 
தொல்லை அகற்றி விடும்
விடுதலைக் கவி எழுத
விரைந்து படை திரள்வாய்

சிங்களம் தனை எதிர்க்கும் 
செங்களம் காணவில்லை 
நித்தமும் எங்கள் மண்ணில்
நிமிரவே தமிழ் கொண்டுள்ளோம்

விடியலின் கவி எழுத 
விரைந்துமே வந்து எங்கள்
கலை வழிப் புரட்சி செய்து 
கலாச்சாரம் காத்திடுவோம்..

கவியால் உலகாளுவோம் 
கவியால் கலைகள் காப்போம்
கவியே எங்கள் காப்பு
கவியால் பகையை தாக்கு.......

           நன்றி 
கவிப்புயல் சரண்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.