Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, March 28, 2019

பிரம்மை...........!!!!!!!! சுஜா தவம்

Currently online
சண்டையிட்டு கொள்ளும் 
இமைகளுக்குள் சமரசம் 
செய்ய வந்ததோ 
இந்த தூக்கம்?

இடைவிடாது தூக்கத்தை 
கலைத்து தன் காதலை 
ஒப்புவிக்க துடிக்கிறதோ 
இந்த கனவுகள்?

உலகாளும் போட்டியில் 
முண்டியடித்துக் கொண்டு 
முன் பின் போட்டி போடும் 
அரசர்கள் தான் இந்த 
சூரிய சந்திரரோ?

உயிர் இன்னும் உடலில் 
இருப்பதை மறந்து 
துயில் கொள்ளும் 
மானிடரை தட்டி எழுப்பும் 
அலாரம் தான் இந்த சேவலோ?

மேடையில்லா அரங்கில் 
நீயா நானா காந்த குரல்கள் என 
சொல்லிக் கொள்ளாமல் 
போட்டி போட்டு தான் 
இந்த குயில்களும் குருவிகளும் 
இசைக்கின்றனவோ?

இயற்கையை இல்லை என்றாக்கும் முயற்சியில் 
என்னை வெல்ல யாருமில்லை என்ற 
கர்வத்தில் தான் கவிகளை 
காட்சி படுத்துகின்றேனோ நானும்?

  நன்றி 
சுஜா தவம்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.