Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 19, 2019

நெருக்கடிக்குள்ளான அனில் அம்பானியை காப்பாற்றிய முகேஷ் அம்பானி !!

Currently online
எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நிலுவைத் தொகையை செலுத்தி சிறை தண்டனையிலிருந்து தொழிலதிபர் அனில் அம்பானி தப்பித்துள்ளார். 

இதுதொடர்பான வழக்கில், கடந்த பெப்ரவரி மாதம் அனில் அம்பானி குற்றவாளி என்றும், எரிக்சன் நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய 459 கோடி ரூபாயை வட்டியுடன் 4 வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

மேலும், இந்த காலக்கெடுவுக்குள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. 

உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், ஒருநாள் முன்பாகவே, அதாவது நேற்றிரவே எரிக்சன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய மீதி நிலுவைத் தொகையை அனில் அம்பானி செலுத்தியுள்ளார். இதனால், அவர் சிறைதண்டனையிலிருந்து தப்பித்துள்ளார். 

இந்த பிரச்சனையிலிருந்து அனில் அம்பானி விடுபட சகோதரர் முகேஷ் அம்பானிதான் பணம் கொடுத்து உதவியுள்ளார். இதற்காக  முகேஷுக்கும், நிதா அம்பானிக்கும் அனில் அம்பானி நன்றி தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.