Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 13, 2019

ஹெரோயின் வைத்திருந்த இருவர் வவுனியாவில் கைது !!

Currently online
ஹெரோயினுடன் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபரகள் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில்  வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த அவதானித்த பொலிசார் அவர்களை சோதனை செய்த போது அவர்களிடமிருந்து இரண்டு கிராம் ஹெரோயின் போதை பொருளை மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை, நுகேகொடை பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்கள் நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.