Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, March 25, 2019

மின்தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவித்தல் !!

Currently online
நாடளாவிய ரீதியில் நாளாந்தம் காலை மற்றும் மாலை வேளைகளில் இரு கட்டங்களாக நான்கு மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடையை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளாந்தம் முதல் கட்டமாக காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை அல்லது முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அல்லது,

பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான 3 மணித்தியாலங்கள் பிரதேச அடிப்படையில் மின்சார தடை அமுல் செய்யப்படவுள்ளது.

மேலும் அதே போல் நாளாந்தம் இரண்டாம் கட்டமாக மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை அல்லது இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, அல்லது இரவு 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரி  தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மின்சாரம் தடை செய்யபப்டும் நேரம், இறுதி செய்யப்பட்டுள்ள போதும் குறித்த நேரங்களில் எந்த பகுதிகளுக்கு மின்சார தடை ஏற்படுத்தப்படும் என்ற இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், எந்த பிரதேசத்துக்கு எந்த நேரத்தில் மின் தடையை ஏற்படுத்துவது என்பது குறித்து இன்றைய தினம் அறிவிப்பதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.