Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 19, 2019

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடை !!

Currently online
அம்பாறை, குருணாகல் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அத்துருகிரியவிலிருந்து கொலன்னாவ க்றீட் உப மின்நிலையம் வரை 122 மெகாவோல்ட் மின்சாரத்தைக் கொண்டுசெல்லும் கடத்திகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

குறித்த தொழில்நுட்ப கோளாறு இன்று காலை 8.15 மணியளவில் ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் மீள் புதுப்பிக்கதக்க சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன, மின்கடத்தியில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

அத்துடன் மின்கடத்தியில் ஏற்பட்டுள்ள கோளாறுக்கும் நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறுக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.