Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 01, 2019

வாகனங்களை கொள்ளையிட்டு விற்பனை செய்த இருவர் கைது !!

Currently online
வாகனங்களை கொள்ளையிட்டு அவற்றின் இலக்கத் தகடுகளை மாற்றி, போலி ஆவணங்களை தயார் செய்து, விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த இரண்டு பேர், கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊராபொல, கிரிந்திவெல பகுதிகளைச் சேர்ந்த 34,31 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் பேலியகொடை, விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து, போலி பதிவுச் சான்றிதழ், போலி அடையாள அட்டைகள் மூன்று, சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.