Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 12, 2019

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை !!

Currently online
பொல்லால் தாக்கப்பட்டு வெல்லாவெளி, ராணமடு பிரதேசத்தில்  65 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட குரோதம் காரணமாக எற்பட்ட மோதலில் அம்பாறை, மத்திய முகாம் பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி பிரதேசத்தைச் ​சேர்ந்த 33, 34 மற்றும் 40 வயதுடைய மூன்று பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், வயல் நிலம் தொடர்பில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்ததால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக  தெரிய வந்துள்ளது. 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.