Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 06, 2019

யாழ். மட்டுவிலில் பதற்றம் ; வாள் மற்றும் கோடாரிகளுடன் மர்ம நபர்கள் அட்டகாசம் !

Currently online
வாள் மற்றும் கோடாரிகளுடன் நுழைந்த மர்மக் குழு இன்று(06) அதிகாலை 12.15 மணியளவில் வீடொன்றின் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் யாழ்ப்பாணம், மட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து தாக்குதல் நடாத்திய குழுவினர் மட்டுவில் சந்தியில் நின்று அட்டகாசம் செய்து வந்ததன் காரணத்தினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. 

சமாதான நீதவான் ஒருவரின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இருபது பேர் அடங்கிய குழு தலைக்கவசம் இல்லாது இலக்கத் தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றமான நிலை காணப்பட்டதாகவும் மக்கள் வெளியே சென்று பார்க்க முடியாத நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

சாவகச்சேரிப் பொலிஸார் மற்றும் 119 அவசரப் பொலிஸாருக்கு அறிவித்தல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் உரிய நேரத்தில் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.