Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, March 15, 2019

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம் !!

Currently online
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகும் என திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமில் போல் அடிகளார் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நான்கு மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்று திருச் செபமாலையுடன் திருவிழா ஆரம்பமாகும். 

மறுநாள் காலை ஏழு மணிக்கு கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்படும். 

யாழ். மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் தமிழகத்தின் கோட்டுர் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய நஷ்ரீன் சூசை ஆண்டகை ஆகியோர் கூட்டுத் திருப்பலியை ஒப்புக் கொடுப்பார்கள்.

இதேவேளை யாழ் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

திருவிழாவிற்கு இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பத்தாயிரம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அவர்களுக்காக சுகாதார வசதிகள், தற்காலிக தங்குமிட கொட்டகைகள், போக்குவரத்து ஒழுங்குகள், படகுச் சேவைகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.