Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 06, 2019

ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெனீவா செல்கிறார் வடமாகாண ஆளுநர் !!

Currently online
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் தனக்கு பதிலாக மூன்று பேரை அனுப்பிவைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, மற்றும் மகிந்த சமரசிங்க ஆகியோரே இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ளனர். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (06) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ் விடயத்தைதெரிவித்துள்ளார். 

இதன்போது, பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு இலங்கைக்கு வாய்ப்பளிக்குமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் இவர்கள் கோரிக்கை விடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.