Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, March 26, 2019

அன்பே வா..............!!!!!!! எஸ்.பி.லக்குனா

Currently online
உன் அன்புக்காக
ஏங்கிக் கொண்டிருக்கிறேன்
அன்பே ....... விரைந்து வா

எனதன்பை உன்னுடன்
பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்
அன்பே ........ பறந்து வா

புன்னகை பூக்களோடு
காத்திருக்கிறேன்
நெஞ்சினில் ஆசையோடு
பார்த்திருக்கிறேன்
அன்பே ....... தாமதியாது வா

இனியும் மௌனம் கொள்ளாதே
இளமை என்னில் தங்காதே
என்னை விட்டு விலகாதே
எந்தன் நெஞ்சம் தாங்காதே

தனிமை என்னை கொல்லுதடி
தலையணை இரவில் நனையுதடி
பொழுதும் அணலாய் கொதிக்குதடி
உன் நினைவே மழையாய் பொழியுதடி

துவண்டு மெலிந்து
போயிருக்கும்
என் மனதுக்கு
அன்பே ..... புத்துயிரூட்டவா

திறந்தே கிடக்கும்
என் நெஞ்சில்
அன்பே ...... காதல் பூபூக்க வா

அன்பே ........ நீ வருவாயா
உன் அன்பை தருவாயா ......................!!!

 நன்றி 
நிறைய ப்ரியமுடன்
வட்டக்கச்சி
எஸ்.பி.லக்குனா.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.