Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, March 16, 2019

பொள்ளாச்சியை அடுத்து நாகையில் பல பெண்களை ஏமாற்றிய கொடூரன் கைது !!

Currently online
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போன்று நாகப்பட்டினத்திலும் பல பெண்களை ஏமாற்றியதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுந்தர் என்ற நாகையைச் சேர்ந்தவர் பல பெண்களை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

அவர்களுடன் தனிமையான இடங்களுக்கு சென்று அங்கு ஆபாசமாக புகைப்படம் எடுத்து பின்னர் அதை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இப்படி சொல்லி சொல்லியே ஏராளமான பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந் நிலையில் பொள்ளாச்சி பிரச்சினை வெளியே வந்ததை அடுத்து சுந்தரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் முன்வந்து புகார் கொடுத்துள்ளார்.

இதேவேளை சுந்தர் பல பெண்களுடன் இருக்கும் ஆபாசப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது. 

இதையடுத்து அவரை நாகை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.