Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, March 27, 2019

விவேக்கின் ''வெள்ளைப்பூக்கள்'' டிரைலர் இதோ !!

Currently online
நடிகர் விவேக்கின் ‘வெள்ளைப்பூக்கள்’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

எழுமின், அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்த காமெடி நடிகர் பத்மஸ்ரீ விவேக். சுமார் 100 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் காமெடி நடிக்கனாக நம் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார். தற்போது புதுமையாக ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் பொலிஸாக நடித்துள்ளார்.

இப்படத்தை விவேக் இளங்கோவன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் விவேக் அமெரிக்காவில் உள்ள தன் மகனுடன் சிறிது காலம் தங்க அங்கு செல்கிறார். இதற்கிடையே அங்கு சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.  மேலும் இந்த கொலைகளை செய்பவர் யார் ? எதற்காக செய்கிறார் ? என்பதை தன் போலிஸ் யுக்தி கொண்டு கொலையாளியை கண்டு பிடிக்கிறார்.

சார்லி, பூஜா தேவாரியா ஆகியோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ’இண்டஸ் கிரியேஷன்ஸ்’ இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை வரும் ஏப்ரல் 19 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந் நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.